Deutsch | Italiano | Français | English | Español | Português | Srpsko-hrvatski/Bosanski | Shqip | தமிழ் | Türkçe | العربية

உங்களிற்க்கு கடன்கள் இருக்கின்றனவா?

கடன்கள் பிரச்சினையாகும்போது பல கேள்விகள் எழுகின்றன.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல கடன் மீள்கட்டமைப்பாளர்கள் அதிக விலையில் தகுதியற்ற கடன் ஆலோசனைகளையே அளிக்கின்றனர். ஆகவே நாங்கள் உங்களுக்கு ஸ்விட்சர்லாந்தின் கடன் ஆலோசனைக் கழகத்தின் (Verein Schuldenberatung Schweiz) உறுப்பினராக இருக்கும் ஏதேனும் ஒரு ஆலோசனை மையத்தையே அணுகுமாறு பரிந்துரைக்கிறோம். அது உங்களுக்கு இலவசமாகவோ அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் கடன் ஆலோசனை அளிக்கும். அங்கு கீழ்கண்ட விடயங்களில் திறமையான ஆலோசனை கிடைக்கும்:

- உங்கள் கடன்களை நீங்கள் கையாளுவதற்கான வழிமுறைகள் கடன்காரர்களின் உரிமை வலியுறுத்தல் மற்றும் வருமானத்தை பற்றுக்கு உட்படுத்துதல் ஆகியவை சட்டத்துக்கு உகந்தவையா என்று பார்த்தல்

- கடன்காரர்கள் மற்றும் கடன் வசூல் அமைப்புக்களுடனான அணுகு முறைகள் சேமிப்புக்கான சாத்தியங்கள் மற்றும் நிதி சம்பந்தமான உரிமை கோரல்கள் (சமூக பாதுகாப்பு, நோய் மற்றும் சமூகக் காப்புறுதி பணவரவுகள் போன்றவை)

- நிதி நிலைமைகளைக் கட்டமைத்தல்

சிறிய கடன்கள் என்றால் நீங்கள் பட்ஜெட் ஆலோசனை மையங்களிடமிருந்தோ அல்லது சமூக ஆலோசனை மையங்களிடமிருந்து ஆதரவு கோரலாம். பொருத்தமான மையங்களை நீங்கள் இங்கே காணலாம்: